டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு..!
டிச.25 முதல் ஜன.2 வரை அரையாண்டு விடுமுறை
டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாவட்டங்களின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்படும் போது, அந்தப் பள்ளி மாணவர்களை அருகில் இருக்கும் பள்ளிகள் உடன் இணைத்துச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
Comments