புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தையில் ஆடு, மாடுகள் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனை

0 2047

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள உள்ள புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்ற கால்நடைச் சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடு, மாடுகள் விற்பனையாகின.

தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கால்நடை சந்தையான புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலப்பின மாடுகள், ஜெர்சி மாடுகள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

ஆடு, மாடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்த நிலையில் ஜெர்சி மாடுகள் 23 ஆயிரம் முதல் 53 ஆயிரம் ரூபாய் வரையிலும், நாட்டு மாடுகள் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. சந்தைக்கு வந்த மாடுகள் மொத்தமாக சுமார் 2 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகவும் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments