அதிவேகமாக வந்து சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய கார்.. சபரிமலை யாத்திரை சென்று திரும்பிய தந்தை - மகன் உட்பட மூவர் பலி..!

0 1798

சென்னை போரூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சபரிமலை யாத்திரை சென்று வந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாங்காடு கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த சங்கர், அவரது மகன் மகேஷ், நண்பர் சின்னராஜ் ஆகியோர் சுசூகி பலினோ காரில் சபரிமலை யாத்திரை சென்று ஊர் திரும்பியுள்ளனர்.

காரை மகேஷ் ஓட்டி வந்த நிலையில், அதிகாலை 3 மணி அளவில் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சங்கரும் அவரது மகன் மகேஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் சின்னராஜுவும் உயிரிழந்தார்.

நீண்ட தூரம் காரை ஓட்டிவந்தது, அதிகாலை தூக்கக் கலக்கம் உள்ளிட்டவையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறும் போலீசார், லாரியை சாலையோரமாக நிறுத்தியிருந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments