அனைவரும் தடுப்பூசி போடுவோம்... ஒமிக்ரானை ஓட விடுவோம்....

0 3032
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து விமான பயணிகளுக்கு இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்று மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து விமான பயணிகளுக்கு இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்று மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் 77நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை கொண்டு பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு மட்டுமின்றி உள்நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments