வீடுகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானை அரிசி ராஜா.. அரசின் கவனத்தை ஈர்க்க வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய மக்கள்

0 1936

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடுகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானை அரிசி ராஜாவை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முகாமிட்டு உள்ள அந்த யானை தினசரி ஒரு வீட்டை இடித்து சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments