நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு... 2 மர்மநபர்கள் தப்பியோடும் சிசிடிவி காட்சி !

0 2431

புதுச்சேரி நெல்லித்தோப்பில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் தங்க செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்ற இரண்டு மர்மநபர்களை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்த மேரிடொலர்ஸ் கேத்ரின், நெல்லித்தோப்பு அருள் படையாட்சி வீதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள், மேரிடொலர்ஸ் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் 2 பேர் தப்பியோடுவதும், பேருந்து நிலையம் அருகே நடந்து செல்வதும் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments