வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் புதிய விரிவாக்க வளாகத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

0 1855

வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் புதிய விரிவாக்க வளாகத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 339 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

கங்கையையும் சிவபெருமானையும் இணைக்கும் காசி விரிவாக்கத் திட்டத்தை பிரதமர் மோடி வாரணாசியில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.விரிவாக்கம் செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் இன்று முதல் காசி விஸ்வநாத் தாம் என்ற பெயரில் அழைக்கப்படும்.

இந்தியாவின் ஆன்மீக அலைகளை எழுப்பக் கூடிய நிகழ்ச்சி என்று தமது டிவிட்டர் பதிவில் இதைப்பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆலய விரிவாக்கப் பணிகளில், இன்று 339 கோடி மதிப்புடைய 23 கட்டடங்களுடைய புதிய வளாகத்தை மோடி திறந்து வைக்கிறார்.

பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பல்வேறு வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. கோவிலை மையமாக வைத்து நான்கு பக்கங்களும் கண்கவரும் கலைச் சிற்பங்கள் வாயில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் இந்த திட்டம் வரலாற்றில் நீங்கா இடம் பெறும் என்றார்.

இதனிடையே காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சிறப்பை விளக்கும் வகையில் புதிய டிரோன் காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

ஏராளமான ஆன்மீக கலை கலாசார நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ள நிலையில் வாரணாசி நகரமே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments