தனியார் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது, திடீரென வலிப்பு வந்து படிக்கட்டில் இருந்து விழுந்த இளைஞர் பலி

0 16517

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே, பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த இளைஞர், திடீரென வலிப்பு வந்து கீழே விழுந்து உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற அந்த இளைஞர், புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

பேருந்து சில்லாநத்தம் பகுதியில் சென்ற போது, படிக்கட்டில் கம்பியை பிடிக்காமல், எந்த பிடிமானமும் இல்லாமல் நின்று பயணம் செய்த முருகனுக்கு, திடீரென உடலில் அசௌகரியம் ஏற்பட்டு, வலிப்பு வரவே, படியில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் சுருண்டு கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.

சக பயணிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் முலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments