நகைக்கடைகளின் சுவற்றை துளையிட்டு கொள்ளை ; சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 2 நகைக்கடைகளில் சுவற்றை துளையிட்டு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வரட்டனப்பள்ளி குப்பம் மெயின் ரோட்டில் கேசவன் என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு நகைக்கடை கட்டிட உரிமையாளர் வீட்டிற்குள் புகுந்த கும்பல் கேசவனை கட்டிப்போட்டு சமையலறை வழியே சுவற்றில் துளையிட்டு நகைக்கடைக்குள் புகுந்து 4 சவரன் நகைகளையும் 7 கிலோ வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும் அதே பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த உமாராதேவி என்பவரின் நகைக்கடையிலும் சுவற்றில் துளையிட்டு 300 கிராம் தங்க நகைகளையும், 3 கிலோ வெள்ளிப்பொருட்களையும், 45ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி பதிவின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments