வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருக்காவிட்டால் கொரோனா பரிசோதனை கட்டாயம் ; தமிழக சுகாதாரத்துறை

0 2484
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்காவிட்டால் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், லண்டன், தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, பிரேசில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒரு டோஸ் அல்லது இதுவரை தடுப்பூசியே செலுத்தி இருக்காவிட்டால் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும் என்றும், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments