வெள்ளம் சூழ்ந்த வீட்டில் 3 நாட்களாக பட்டினியில் தவித்த மூதாட்டி.. இளைஞரால் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கவைப்பு

0 2835
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே, வெள்ளம் சூழ்ந்த வீட்டில் மூன்று நாட்களாக, மூதாட்டி ஒருவர் பட்டினியுடன் தவித்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே, வெள்ளம் சூழ்ந்த வீட்டில் மூன்று நாட்களாக, மூதாட்டி ஒருவர் பட்டினியுடன் தவித்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

மஞ்சத்தோப்பு கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், பலரும் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்த நிலையில், 60 வயது மூதாட்டி ஒருவர், வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கியிருப்பதை அறிந்த சஜு என்ற இளைஞர், அவரை மீட்கச் சென்றார். அப்போது அவரிடம் மூன்று நாட்களாக உணவின்றி தனியாக தவிப்பதாக, மூதாட்டி கதறி அழுதார்.

அந்த இளைஞரால் மீட்கப்பட்ட மூதாட்டி, தற்போது நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு, உணவு மற்றும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. மூதாட்டியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments