விவசாயிகள் போராட்டத்திற்கு விருந்தாளியாக வந்த பாம்பு..! கூச்சலிட்டு ஓடிய பெண்கள்

0 4316

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் ஓடையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க கோரி நீருக்குள் இறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் கூட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் பெண்கள் கூச்சலிட்டப்படி விலகி ஓடினர்.  விவசாயிகள் போராட்டத்தில் அழையா விருந்தாளியாக வந்த பாம்பு தோழன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் உள்ள நாவலூர் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. சாத்தநத்தம் ஆலங்குடி வழியாக திட்டக்குடி மற்றும் கடலூர் செல்ல மக்கள் இந்த தரைப்பாலத்தை தான் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் மழைக்காலங்களில் தலைபாலத்தின் மீது அதிகஅளவுதண்ணீர் செல்வதால் அந்தவழியை பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலைஏற்பட்டது. இதுகுறித்து மேம்பாலம் அமைக்க கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓடும் ஓடைநீரில் இறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

அந்த ஓடையின் மேல் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாம்பு ஒன்று தண்ணீரில் நீந்தியபடி வந்து கூட்டத்திற்குள் புகுந்தது.

அங்கு கோஷமிட்டபடி நின்ற பெண்கள் இதனை கண்டு பயந்து கூச்சலிட்டபடி விலகி ஓட, ஒரு விவசாயி அசால்டாக அந்த பாம்பு மீது தண்ணீரை ஊற்றி திசைமாறி செல்லவைத்தார்.

இதையடுத்து விவசாயிகள் கூட்டத்துக்குள் புகுந்த பாம்பு பாதுகாப்பாக நீருக்குள் நின்ற புதருக்குள் சென்று மறைந்தது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து ஓடும்தண்ணீரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர்களுக்கு வில்லனான எலிகளை வேட்டையாடுவதால் பாம்பு விவசாயிகளின் தோழனாக பார்க்கப்படுகின்றது. இந்த போரட்டத்திற்கு விவசாயிகளின் தோழனான பாம்பு அழையா விருந்தாளியாக வந்து ஆஜராகிச்சென்ற சம்பவம் அங்கிருந்தபெண்களை சற்று பதற வைத்தது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments