ஜெயங்கொண்டத்தில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து தங்க நகை என நினைத்து கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள்...

0 5028

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நகை அடகு கடையின் பூட்டை உடைத்து தங்க நகை என நினைத்து, கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மெயின் ரோட்டில் மளிகைக் கடை மற்றும் அடகு கடையை வெங்கடேசன் என்பவர் நடத்தி வருகிறார். அடகு கடையில் கவரிங் நகைகளையும் சேர்த்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் கடையின் சிசிடிவி கேமராக்களை துணியால் மூடி, கடையின் பூட்டை உடைத்து, சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது பற்றி தீவிரமாக விசாரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments