அமெரிக்காவிடம் ரூ. 20,000 கோடியில் 30 பிரிடேட்டர் டிரோன்கள் வாங்க இந்தியா ஏற்பாடு.?

0 3647

முப்படைகளுக்கும் அமெரிக்காவில் இருந்து இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 பிரிடேட்டர் டிரோன்கள் கொள்முதல் செய்வது குறித்துப் பாதுகாப்புத் துறைச் செயலர் தலைமையிலான உயர்நிலைக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட உள்ளது.

டிரோன் வாங்குவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் இரண்டு ஆண்டுகளாகப் பேச்சு நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டால் அது பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

அதன்பின் கொள்முதல் உடன்பாடு கையொப்பமாகுமுன் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் பெறப்பட்டால் முப்படைகள் ஒவ்வொன்றும் பத்து டிரோன்களைப் பெறும். இவை கண்காணிப்புக்கு மட்டுமல்லாமல், இலக்குகளைத் தாக்கவும் பயன்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments