டெல்லியைப் பின்பற்றி ஹரியானாவிலும் பள்ளிகளுக்கு நவ.17 வரை விடுமுறை

0 1598

டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான ஹரியானாவும் நவம்பர் 17 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தலைநகரில் காற்றின் மாசு மிகவும் அபாயகரமான அவசர நிலையை எட்டியிருப்பதால் டெல்லியில் பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைப் பின்பற்றி ஹரியானா அரசும் குருகிராம், ஃபரீதாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் இயங்காது என அறிவித்துள்ளது.

அரசு அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் தனியார் நிறுவனங்களும் கூடுமானவரை வீட்டில் இருந்து ஊழியர்களைப் பணியாற்ற அனுமதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments