சென்னையில் இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க 9 பேர் கொண்ட குழு அமைப்பு ; அமைச்சர் கே.என்.நேரு

0 1995
சென்னையில் இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க 9 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னையில் இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க முன்னாள் தலைமைச் செயலாளர் திருப்புகழ் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் கே.என்.நேரு., எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் 90 சதவீதம் நீர் வெளியேற்றப்பட்டு விட்டது எனவும், இன்னும் 10 சதவீதம் தண்ணீரை மட்டுமே வெளியேற்றப் பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments