சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 4688

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழைக்கும், சில நேரங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், சேலம், ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், கரூர், நீலகிரி, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வரும் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments