சரக்கு வாகனத்தில் இருந்து ரூ 1.60 கோடி மதிப்புடைய செல்போன் கொள்ளை, 13 பேர் கைது

0 6397

நொய்டாவில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபல நிறுவனத்தின் செல்போன்கள் பார்சல்களை கொள்ளையடித்த 13 பேர் கொண்ட கும்பலை மதுரா போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1,589  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சரக்கு வாகனங்களைக் குறிவைத்து பயணிகள் போல அதில் ஏறிக் கொள்ளும் இந்த கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் சரக்கு பார்சல்களைக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments