முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ; தடுக்க முயன்ற காவலருக்கு கன்னத்தில் அறை

0 4917
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் உருவ பொம்பையை எரிக்க முயன்ற பாஜக முன்னாள் எம்.எல்.ஏ

கர்நாடகாவில் போராட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் உருவ பொம்பையை எரிக்க முயன்ற பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், தடுக்க முயன்ற காவலரை கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சித்தராமையா அவதூறு கருத்துகளை கூறியதாக தெரிவித்து, ராய்ச்சூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜகவினர் சிலர் சித்தராமையாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயன்ற நிலையில், அதனை உளவுத்துறை காவலர் ராகவேந்திரா தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா ரெட்டி, ராகவேந்திராவின் கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

 

Former MLA & Raichur #BJP leader, #PapaReddy slaps #Police constable on duty for stopping the protesters from burning the effigy of former CM #Siddaramaiah at #Raichur City.

Hello @DgpKarnataka, @spraichur1, Book him under corresponding IPC section & send him to jail. pic.twitter.com/tRYzJ6hPqr

— Faizal Peraje ?? (@FaizalPeraje) November 3, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments