இந்திய அணியின் ஆலோசகராக பணியை தொடங்கிய முன்னாள் கேப்டன் தோனி

0 5389

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் தோனி, தன்னுடைய பணியினை தொடங்கியுள்ளார்.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 24-ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், அணியின் வலைப்பயிற்சி நேற்று தொடங்கியதை அடுத்து, பேட்டிங் உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளை தோனி வழங்கினார். மேலும், தோனியை வரவேற்கும் விதமாக, புதிய பணியுடன் இந்திய அணியில் தோனி இணைந்து விட்டதாக பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments