மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் கோவையைச் சேர்ந்த நபர்களின் வீடுகளில் சோதனை

0 1268

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள புலியகுளம் பகுதியிலுள்ள மருத்துவர் தினேஷ் மற்றும் சங்கம் பகுதியிலுள்ள டேனிஷ் ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்றது.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் பொள்ளாச்சியில் சந்தோஷ் என்பவரது வீட்டிலும், தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் கார்த்திக் என்பவரது வீட்டிலும் ரெய்டு நடந்தது. இதேபோல, கடந்த 20 வருடங்களுக்கு முன் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த காளிதாஸ் தற்போது கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிவகங்கை அண்ணாமலை நகரில் வசிக்கும் காளிதாஸின் சகோதரர் சிங்காரம் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments