கோவையில் நள்ளிரவில் மாயமான மருத்துவ மாணவி..!

0 43720

ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் கோவை மாணவி ஒருவர் நள்ளிரவில் வீட்டின் அருகே காரில் ஏறி மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தன்யா, ரஷ்யாவில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் கோவை வந்த தன்யா நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.

இதனை அடுத்து பல இடங்களிலும் அவரை தேடிய உறவினர்கள் சிசிடிவி காட்சியை பார்த்த போது நள்ளிரவு ஒரு மணி அளவில் வெள்ளை நிற காரில் தன்யா ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments