அஸ்ட்ரோசாட் சாதனைகளை தொடர்ந்து இஸ்ரோ பரிசீலனை...!

0 1223

அஸ்ட்ரோசாட் சாதனைகளை தொடர்ந்து, வானியல் ஆராய்ச்சிக்காக, புதிய வரிசையில் அடுத்த தலைமுறை செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானியல் ஆராய்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட அஸ்ட்ரோசாட் என்ற செயற்கைக்கோளை 2015ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவியது. 5 ஆண்டுகளுக்கு செயல்படும் என திட்டமிட்டாலும், அதையும் தாண்டி அந்த செயற்கைக்கோள் ஆய்வுப் பணிகளை தொடர்ந்து வருகிறது.

9.3 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கேலக்சியில் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள், கருந்துளை புறப்பகுதிகளில் இருந்து வெளிப்படும் உயர்ஆற்றல் எக்ஸ்ரே உமிழ்வு போன்ற, உலக அளவில் அங்கீகாரம், பாராட்டைப்பெற்ற கண்டுபிடிப்புகளை இந்த செயற்கைக்கோள் நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அஸ்ட்ரோசாட்-2 செயற்கைக்கோள் ஏவப்படுமா என்ற கேள்விக்கு, புதிய வரிசையில் அடுத்த தலைமுறை செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ பரிசீலித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி ஆய்வுக் குழு தலைவருமான ஏ.எஸ்.கிரண்குமார் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments