சரக்கு லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறை எதிரொலி ; பிரிட்டனில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

0 1503
பிரிட்டனில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

பிரிட்டனில் சரக்கு லாரி ஓட்டுனர்களின் பற்றாக்குறையால் உணவு முதல் கிறிஸ்துமஸ் பரிசுகள் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக லாரி ஓட்டுனர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதையடுத்து, பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஓட்டுனர்கள் பிரிட்டனிலிருந்து வெளியேறியதாலும், கோவிட் ஊரடங்கு காரணமாகவும் சுமார் 1 லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பிரிட்டனில் ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments