200 கோடி பண மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர், லீனா பால் மீது வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்குத் தொடர்பு?

0 2409

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று இரண்டாம் முறையாக விசாரணை நடத்த உள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அவர் மனைவி லீனா பால்  ஆகியோர் ரேன்பக்சி நிறுவனர்கள் சிவீந்தர் சிங், மால்வீந்தர் சிங் ஆகியோரை ஏமாற்றியும் மிரட்டியும் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக டெல்லிக் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

இதன் அடிப்படையில் சென்னைக் கிழக்குக் கடற்கரையில் உள்ள லீனா பாலின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் 84 லட்ச ரூபாய் பணம், விலையுயர்ந்த கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் சுகேஷ் சந்திரசேகர் செல்பேசி அழைப்பு, குறுஞ்சேதி ஆகியவற்றின் மூலம் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் பண மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டசிடம் கடந்த மாதமும் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments