கத்தியைக் காட்டி இருவரிடம் நகை, செல்போன் பறித்த கொள்ளையனை 8 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று பிடித்த போலீசார்

0 1911
கத்தியைக் காட்டி இருவரிடம் நகை, செல்போன் பறித்த கொள்ளையனை 8 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று பிடித்த போலீசார்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை 8 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.

பனவெளி சாலையில் சென்ற விஜயகுமாரை மடக்கிய 2 பேர் கத்திய காட்டி மிரட்டியதாகவும், பணம் தர மறுத்த அவரை மூக்கு மற்றும் கையில் தாக்கி செல்போன், உடன் வந்த பெண்ணிடம் இருந்து காதணி உள்ளிட்டவைகளை பறித்து தப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஊர் மக்கள் அளித்த புகாரில் போலீசார், நெடுஞ்சாலை பிரிவினர் 8 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தை விரட்டிச் சென்று இருவரையும் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments