9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

0 2062
வேட்புமனு தாக்கல் செப்.15ம் தேதி தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மொத்தமுள்ள 27 ஆயிரத்து 3 இடங்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் செப்.15ம் தேதி தொடங்கிய நிலையில், மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 25-ம் தேதியாகும். அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments