18 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை நிறைவு

0 2254

18 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் சோதனை நிறைவடைந்துள்ளது.

இதுபற்றிப் பேசிய பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா இலா, பீடியாட்ரிக் கோவேக்சின் தடுப்பூசி தற்போதுதான் 2, 3-ம் கட்ட பரிசோதனையை நடத்தி முடித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த பரிசோதனையின்போது 1000 குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டதாகவும், செயல்திறன் உள்பட பல்வேறு தரவுகளை சேகரிக்கும் பணி நடப்பதாகக் கூறிய கிருஷ்ணா, அடுத்த வாரம் இந்த தரவுகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments