போதை மருந்து விவகாரத்தில் நடிகை முமைத்கானிடம் 7 மணி நேரம் விசாரணை

0 1503
போதை மருந்து விவகாரத்தில் நடிகை முமைத்கானிடம் 7 மணி நேரம் விசாரணை

ஐதராபாத்தில் போதை மருந்து விவகாரத்தில் நடிகை முமைத்கானிடம் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஐதராபாத் எப்.கிளப்பில் 2017ஆம் ஆண்டு போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஏற்கனவே இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி, ரகுல் பிரீத் சிங், நடிகர் ரவிதேஜா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

இதை தொடர்ந்து நடிகை முமைத்கானை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் நேரில் ஆஜராகிய முமைத்கானிடம் எப் கிளப்பில் நடைபெற்ற விருந்தில் போதை மருந்து பயன்படுத்தினீர்களா, போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியான கெல்வினுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது போன்ற பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments