தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வருகிற சனிக்கிழமை பதவி ஏற்பு

0 2012

தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி வருகிற சனிக்கிழமை பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் வருகிற வியாழன் அன்று சென்னை வருகிறார்.

தமிழகத்தின் 15ஆவது ஆளுநராக அவர் சனிக்கிழமை பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையில் பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும்  பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பன்வாரிலாலை மரியாதை நிமித்தமாக இன்று காலை சந்தித்துப் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments