ஆப்கனில் பெண்களுக்கென தனி பள்ளி, கல்லூரி, பல்கலைகழகம்.?

0 1900

ஆப்கானில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் பணிபுரிய கட்டாயம் அனுமதிக்க முடியாது என்பதில் தெளிவாக இருப்பதாக தாலிபான் மூத்த தலைவர்களுள் ஒருவரான Waheedullah Hashimi தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த Waheedullah Hashimi, அரசுத் துறைகளில் பெண்களுக்கு குறிப்பிட்டளவிலான இடம் ஒதுக்கப்படும் என்றும், மருத்துவத் துறையில் அதிகளவில் பணியமர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இருபாலர் கல்வி முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் பெண்களுக்கு என தனி பல்கலைகழங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மதரஸா தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண்களுக்கு என தனி மருத்துவமனைகள் திறக்கப்படும் என்றார். செய்தி மற்றும் ஊடகத்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் ஊடகம், வங்கி, உள்ளிட்டவைகளில் பணிபுரிய பெண்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தார். ஷரியா சட்டத்தின் படியே அனைத்தும் திட்டுமிட்டுள்ளதாக தெரிவித்தார்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments