மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த சகோதரர்கள் கைது

0 2620
மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த சகோதரர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தங்களது வீட்டைக் கொளுத்திய ஆத்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கொடூரமாக அடித்துக் கொன்றதாக கூறப்படும் அண்ணன் - தம்பி கைது செய்யப்பட்டனர்.

சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில், எதிர் வீட்டைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது குடும்பத்தாரிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இரவு சுந்தரம் தனியாக இருந்த நிலையில், வழக்கம்போல் தகராறில் ஈடுபட்ட வீரமுத்து, வீட்டையும் தீ வைத்து கொளுத்தினார் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் இருந்த சுந்தரத்தின் மகன்கள் ராஜேந்திரனும் விஜியும் இதனைக் கேள்வியுற்று ஆத்திரமடைந்து ஊருக்கு வந்து வீரமுத்துவை கட்டையாலும் கல்லாலும் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments