மது அருந்தியபோது ஏற்பட்ட பிரச்சனை... ஜாமீன் வழங்க நீதிபதியின் நூதன நிபந்தனை.!

மதுபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இனிமேல் குடிக்கவே மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மது அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தகராறில் பீர் பாட்டிலால் நண்பரை தாக்கியதாக திருச்சியை சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இரண்டு பேர் மீதும் கடந்த ஜூலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி இளைஞர்கள் இருவரும் மனுதாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
ஆகையால்,மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Comments