புதுச்சேரியில் பாத்திர கடையின் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு தர மறுத்ததால் அவரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்

0 2808

புதுச்சேரியில் பாத்திர கடையின் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மர்ம நபர்கள் அவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரெயின்போ நகரைச் சேர்ந்த இராஜ்குமார் என்பவர் தியாக முதலியார் வீதியில் முத்தமிழ் மெட்டல் ஸ்டோர் என்ற பெயரில் பாத்திர கடை நடத்தி வருகிறார்.

மதியம் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, 20 வயது மதிக்கத்தக்க 4 இளைஞர்கள் உள்ளே நுழைந்து மாமூல் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இராஜ்குமார் பணம் தர மறுத்ததால் அவரை சரமாரியாகத் தாக்கிய கும்பல், கடையிலிருந்த பொருட்களையும் சூறையாடிவிட்டுச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments