புதுச்சேரியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்ற அமைச்சர்

0 3936

புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் கல்வித்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்திற்கு வரும் 8 ஆம் தேதி பிறந்தநாள் வரவுள்ளதால் ஒவ்வொரு தொகுதிகளிலும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருப்புவனை தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம்,தொண்டர்கள் புடை சூழ அவரது மனைவியுடன் சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்து, கேக் வெட்டி கொண்டாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments