சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த சூனியக்கார சித்தி கைது

0 4874
சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த சூனியக்கார சித்தி கைது

சிறுவனின் உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தையின் காதல் மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு 10 வயதில் சித்தார்த் , 8 வயதில் நித்திஷ் ஆகிய இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

தாயை இழந்த குழந்தைகள் இருவரும் அவர்களுடைய தந்தையுடன் வசித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேணி என்ற பெண்ணை காதலித்த சேட்டு அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

கணவர் சேட்டு வேலைக்காக வெளியூர் சென்ற நிலையில் முதல் மனைவியின் குழந்தைகளான சித்தார்த் மற்றும் நித்திஷ் ஆகியோரை காதல் சித்தி வேணி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக நித்தீஷின் முதுகு கை கால்கள் பாதம், ஆண் உறுப்பு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் சூடு வைத்து கடுமையாக சித்தரவதை செய்து வந்துள்ளார்

இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை வீட்டில் இருந்து தப்பிய சிறுவன் நித்தீஷ், பெரியம்மா வீட்டிற்கு ஓடி வந்து தந்தையின் காதலியால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் உடனடியாக நித்திஷை காவல் நிலையம் அழைத்து சென்று புகார் அளித்தனர் .

இதையடுத்து தந்தையின் காதல் சித்தி வேணியை கைது செய்த குடியாத்தம் போலீசார் அவரிடம் இந்த கொடுமையின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் வெளியூரில் வேலைப்பார்த்து வந்த நித்திஷின் தந்தை சேட்டுவை காவல் நிலையம் வரவைத்து விசாரனை மேற்கொண்ட போலீசார் காயமடைந்த சிறுவன் நித்திஷை மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தங்கள் காதல் வாழ்க்கைக்கு மகன்கள் இருவரும் இடையூறாக இருப்பதாக கருதி வேணி இந்த சித்ரவதையை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.பிறர் குழந்தைகளை தனது குழந்தைகளாக நேசிக்கும் தாய்மை உள்ளம் நிறைந்த பெண்கள் மத்தியில் வேணி போன்ற சூடுவைக்கும் சூனியக்காரிகள் தாய்குலத்தின் சாபக்கேடு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments