சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டசிடம் விசாரணை

0 1786
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டசிடம் விசாரணை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோடீஸ்வர இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் தொடர்பான பணமோசடி வழக்கு ஒன்று தொடர்பாக, பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டசிடம் அமலாக்கத் துறையினர் டெல்லியில் வைத்து 5 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி அல்ல என்றும் சுகாஷ் சந்திரசேகருக்கு எதிரான பலகோடி ரூபாய் மோசடி வழக்கில், சாட்சிகளில் ஒருவராக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 200 கோடி ரூபாய் பணம் மிரட்டி பறித்ததாக சுகாஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் ஜாக்குலினிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 24 ஆம் தேதி சென்னை கானத்தூரில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சுகாஷ் சந்திரசேகரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர கார்களும், எண்பத்தி இரண்டரை லட்சம் ரொக்க பணமும், பண்ணை வீடும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சோதனையின் போது, 200 கோடி ரூபாய் மோசடியில் சுகாஷ் சந்திரசேகர் மூளையாக செயல்பட்டது உறுதியானதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments