இத்தாலி நகரில் 87 ரூபாய்க்கு ஒரு வீடு வேண்டுமா? - அழகு கொஞ்சும் மென்சா நகரை புனரமைக்க வித்தியாசமான அறிவிப்பு

0 2477
இத்தாலியின் மென்சா என்ற (Maenza) நகரில் ஒரு யூரோவுக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 87 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கலாம் என்ற வித்தியாசமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மட்டுமே உள்ளது.

வீட்டை வாங்குபவர்கள் அதில் வசிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் அவற்றை புனரமைப்பது கட்டாயமாகும். இத்தாலி தலைநகரான ரோமிற்கு 70 கிலோ மீட்டர் வடக்கே உள்ளது இந்த நகரம்.

இந்த நகரில் மக்கள் தொகை குறைந்து வருவதை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இந்த நகரத்திற்கு புத்துயிர் ஊட்டவும் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக நகர மேயர் கிளாடியோ ஸ்பெரெடுடி (Claudio Sperduti) தெரிவித்துள்ளார்.

லெபினி மலைகளில் அமைந்துள்ள இந்த நகரத்தில் வீடு வாங்குபவர்கள் அந்த வீட்டை எப்படி புதுப்பித்து எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பத்தை தெரிவிக்க வேண்டும். அதற்காக 5 ஆயிரம் யூரோக்களை டெபாசிட் செய்ய வேண்டும். வீட்டு பணிகள் முடிந்த பின்னர் அந்த தொகை திருப்பி வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments