ஆப்கானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டதற்காக வருந்தவில்லை - அதிபர் ஜோ பைடன்

0 3374

ஆப்கானில் இருந்து அமெரிக்கர்களையும் அதன் நட்பு நாடுகளின் குடிமக்களையும் பாதுகாப்பாக அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டதற்கு தாம் வருந்தவில்லை என்றும் இது முன்பு எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு என்றும் கூறினார்.  அமெரிக்க மக்களை தவறாக வழி நடத்தி ஒரு வெளிநாட்டில் உள்நாட்டுப் போரை நீண்ட காலமாக நடத்திக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தற்போது நிகழ்ந்திருப்பது மனதை மிகவும் வாட்டுவதாகக் கூறிய அவர் தாலிபன்கள் அமெரிக்கர்களைத் தாக்கினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments