பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டங்கள் -ராமதாஸ் கருத்து

0 2526

நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மொத்த நிலப்பரப்பில் காடுகளின் அடர்த்தியை 33 விழுக்காடாக உயர்த்தும் நோக்குடன் மிகப்பெரிய அளவில் மரம் வளர்க்கும் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழி, இலக்கியங்கள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றுக்காகவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments