ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரிட்டன் தடகள வீரர் Chijindu Ujah தகுதி நீக்கம்

0 6125

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரிட்டன் தடகள வீரர் Chijindu Ujah தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 400 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிரிட்டன் வீரர் Chijindu Ujah ஊக்க மருந்தில் சிக்கி உள்ளதாகவும், அதேபோல் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட பஹ்ரைன் வீரர் Sadik Mikhou, ஜார்ஜியா குண்டு எறிதல் வீரர் Benik Abramyan மற்றும் கென்ய தடகள வீரர் Otieno Odhiambo ஆகியோரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ostarine மற்றும் S-23 வகை ஊக்கமருந்தை வீரர் பயன்படுத்தி இருப்பதாக, உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்  தெரிவித்துள்ளது. Chijindu Ujah-வுடன் களமிறங்கிய இதர பிரிட்டன் வீரர்களின் பதக்கமும் கேள்விக்குறியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments