முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்

0 4188

லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உட்பட பங்குதாரர்கள், 10 நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 60 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், வழக்கில் சிக்கியுள்ள நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள்  பெயரிலுள்ள வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்குகள்  தொடர்பான பரிவர்த்தனை ஆவணங்களை ஏற்கனவே பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், ஏற்கனவே 2 கோடி வைப்பு நிதி தொடர்பான ஆவணம் ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், 2 கோடி வைப்பு நிதி உள்ள அந்த வங்கி கணக்கை முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments