வாகனம் மோதியதில் கன்றுக்குட்டி படுகாயம்... இடத்தை விட்டு நகராமல் கன்றுகுட்டியை சுற்றி சுற்றி வந்த தாய்ப்பசு

0 2657

நாகர்கோவிலில், வாகனம் மோதியதில் கன்றுக்குட்டி படுகாயம் அடைந்த நிலையில், தாய்ப்பசு கன்றை விட்டு நகராமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்து பாசப்போராட்டம் நடத்தியது.

செட்டிகுளம் சந்திப்பு அருகே தாய்பசுவுடன் சாலையில் சுற்றித்திரிந்த கன்றுக்குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியது. அப்போது அந்த வழியாக வந்த கால்நடை மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்த கன்றுகுட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். கன்றுக்கு சிகிச்சை அளிக்கும் போது தாய்ப்பசு கன்றுகுட்டியை சுற்றி சுற்றி வந்தது.

\கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற்றை உரிய முறையில் பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்துவிடுவதால் இது போன்ற விபத்துகள் நிகழ்வதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments