தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின

0 3917

மிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைனில் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக, அனைத்து பேராசிரியர்களும், பணியாளர்களும் இன்று முதல் கல்லூரிகளுக்கு நேரில் வரவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் கோதை, ஆசிரியர்களைப் பொறுத்தவரை நேரில் வகுப்பெடுப்பதற்கும், இணையம் மூலமாக வகுப்பெடுப்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றார். மேலும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை வருகைப்பதிவேடு எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments