முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்த அமைச்சருக்கான சலுகைகள்- நிராகரித்த எடியூரப்பா

0 4432

தனக்கு அமைச்சருக்கான சலுகைகள் வேண்டாம் என கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததால், எம்.எல்.ஏ.வாகவே மட்டுமே இருக்கிறார். இதனால் அவர் வசித்து வரும் காவிரி பங்களாவை காலி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அதே பங்களாவில் எடியூரப்பா தங்கும் வகையில் அவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.

மேலும் எடியூரப்பாவுக்கு அமைச்சர்களுக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது தமக்கு அமைச்சருக்கான எந்த சலுகையும் வேண்டாம் என்றும், தனக்காக கர்நாடக அரசு வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments