கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை காலால் எட்டி உதைத்த ஆட்டோ ஓட்டுநர்... ஆந்திராவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

0 4793

ஆந்திர மாநிலம் குண்டூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கடன்காரர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

விஜயவாடா ராணிகாரி தோட்டவை சேர்ந்த பெண், மகநாட்டை சேர்ந்த தொழிலாளி கோபி கிருஷ்ணாவுக்கு 3 லட்ச ரூபாய் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துமாறு பெண் அறிவுறுத்தியதாகவும், பணத்தை தருவதாக கூறி பெண்ணை தன் ஆட்டோவில் ஏற்றிச் சென்று, கிருஷ்ணா நதிக்கரையில் வைத்து கோபி கிருஷ்ணா வாக்குவாத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணை, கோபி கிருஷ்ணா பலமாக உதைத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments