பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்

0 3786
பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்

ள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர் இந்திய குழந்தைகள் கொரோனாவுக்கு எதிராக நல்ல எதிர்ப்பாற்றலைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு விகிதம் 5 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்கத் திட்டமிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பள்ளிப்படிப்பு முக்கியமானது என்றும், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இந்தியாவில் செப்டம்பர் முதல் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments