திருமணத்திற்கு ஒருநாள் முன்பே மணமகன் கொலை... பெற்ற மகனையே கோடாரியால் கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரண்.!

0 32015

துரையில் திருமணத்திற்கு ஒருநாள் முன்னதாக ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனை தந்தையே கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது 20 வயது மகனான பிரதீப், சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தான். குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில் தந்தை இளங்கோவனுக்கும் அவரது மகன் பிரதீப்புக்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.

மேலும் பிரதீப் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தனது உறவுக்கார 17 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளான். இதனையடுத்து அவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில் தற்போது ஜாமீனில் பிரதீப் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கும், 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் திருமணம் செய்த அதே பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் மணமகன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் நடத்த பேசி முடிக்கப்பட்டது. இதனையடுத்து திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவீட்டாரும் பரபரப்பாக ஈடுப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே திருமணத்திற்கு முந்தைய நாளான சனிக்கிழையன்று இரவில், குடிபோதையில் இருந்த மகனுக்கும், தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை அடக்க முடியாத இளங்கோவன் அருகிருந்த கோடாரியால் மகன் பிரதீப்பை சராமாரியாக வெட்டிபடுகொலை செய்து விட்டு நேராக வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வாடிப்பட்டி போலீசார், இறந்த இளைஞர் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு முந்தைய நாளில் பெற்ற மகன் என்றும் பாராமல் ஆத்திரத்தில் தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments