காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0 2643

ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

காஷ்மீரில் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு அண்மையில் அழைப்பு விடுத்தது. கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பரிசோதனைச் சான்றிதழுடன் வருமாறு மத்திய அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments