கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் பத்தாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறப்பு - ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

0 2835
ர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் பத்தாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறப்பு - ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

ர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் பத்தாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கல்லில் தமிழகத்துக்கு நீர்வரத்து ஏழாயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணையில் இருந்து ஐயாயிரம் கனஅடி நீரும்  கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து ஐயாயிரத்து 238 கன அடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. 

தமிழக எல்லையில் காவிரியில் நீர்வரத்து நேற்று மாலையில் நொடிக்கு ஐயாயிரம் கன அடியாக இருந்தது. இன்று காலை ஏழாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்ந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments